அதிமுகவின் ஓட்டுக்கள் அனைத்தும் திமுகவுக்கே விழும்…. அடித்து சொல்லும் அமைச்சர் பொன்முடி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நிச்சயம் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் மகளிர் உரிமை தொகை, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. அவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை.

இந்த முறை அதிமுகவின் ஓட்டுகள் அனைத்தும் கண்டிப்பாக திமுக விற்கு தான் கிடைக்கும். சமூக நீதி பற்றி பேசும் பாமக டாக்டர் ராமதாஸ் முதலில் அதை பாஜக விடம் பேச வேண்டும். சமூக நீதிப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு மட்டும் தான் தகுதி இருக்கிறது. திமுக போன்ற தோழமைக் கட்சிகளை ஆதரித்து செயல்படுகிற கட்சி என்று ஒன்று கிடையாது. மேலும் சமூக நீதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக செயல்படலாம் என்று முதல்வர் அறிவித்தார் என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author