அரசியல் உரையாடல்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் ஆசியாவின் நேட்டோவை அமெரிக்கா உருவாக்க முயற்சிக்கிறது என்றும் சிஜிடிஎன் நடத்திய கருத்துக் கணிப்பில் 93.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஆசியி-பிசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவை விரிவாக்க முயற்சிக்கப்படுகிறது. நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கெடுக்க ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பிற ஆசிய-பசிபிக் கூட்டணி நாடுகளுக்கு நேட்டோ அழைப்பு விடுத்துள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவை அமெரிக்கா ஈடுபடுத்த முயற்சிக்கிறது. இதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று 91 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
5 கண்கள் கூட்டணி, குவாட், ஆகுஸ், அமெரிக்கா-ஜப்பான்-தென்கொரியா முத்தரப்பு ஒத்துழைப்பு, அமெரிக்கா-ஜப்பான்-பிலிப்பைன்ஸ் முத்தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட சிறிய அளவிலான அமைப்பு முறைமைகளை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு முறைகள் சிறிய குழுக்களாக பனிப்போர் சிந்தனையில் இயங்குகிறது என்று 82 விழுக்காட்டுக்கும் மேலானோர் கூறியுள்ளனர்.
ஆசியாவின் நேட்டோ உருவாக்கப்பட்டு விட்டால் பிராந்திய அளவிலான எதிரெதிர் நிலை தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நெடுநோக்கு ரீதியிலான சமநிலை சீர்குலைக்கப்படும் என்றும் 86 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். தனது சொந்த நலனுக்காக பிற நாடுகளின் நலன்களை அமெரிக்கா விற்று வருகிறது என்று இணைய பயனாளர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு, எதிர்ப்பு, காலனியாதிக்கம் உள்ளிட்டவற்றால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் தற்சமயம் நிலவும் நிலைத்தன்மை எளிதாக கிடைத்தவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.