சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, 14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் சீனாவின் சோஷலிச ஜனநாயகத்தின் முன்னேற்றம் குறித்து தகவலை வெளியிட்டது.
14ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், சீனத் தேசிய மக்கள் பேரவை புதிய சாதனைகளை எட்டியுள்ளன. சீனத் தேசிய மக்கள் பேரவையின் அமைப்புமுறை மேலும் மேம்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டின் மார்ச் முதல் இது வரை, சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி 35 சட்டங்களை இயற்றி, 62 சட்டங்களைத் திருத்தி, 34 தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை நிறைவேற்றியுள்ளது.
இது, நாட்டின் ஆட்சிமுறைக்கு அவசர தேவை மற்றும் மக்களின் அருமையான வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான அவசியமான சட்ட முறைமையை மேம்படுத்தும்.