சீன-வெனிசுலா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், வெனிசுலா அரசுத் தலைவர் மதுரோ ஆகிய இருவரும் 28ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
சீனாவும் வெனிசுலாவும் ஒன்றுக்கு ஒன்று நம்பத்தக்க, கூட்டு வளர்ச்சியை நாடும் நல்ல கூட்டாளிகளாகும். 50 ஆண்டுகளில், சர்வதேச நிலைமை தொடர்ந்து மாறி வரும் பின்னணியில், இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளித்து வருகின்றன. சர்வதேச நீதியையும் வளரும் நாடுகளின் சரியான உரிமையையும் இரு நாடுகள் இணைந்து பேணிக்காக்க வேண்டும். இரு நாட்டு உறவு நிறுவப்பட்ட ஆரம்பக் காலச் சூழலை மாறக்காமல், பாரம்பரிய நட்புறவைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும்.
50ஆவது ஆண்டு தூதாண்மை உறவு என்ற புதிய துவக்கப் புள்ளியில், இரு தரப்புகளுக்கிடையில் அனைத்து காலங்களில் நெடுநோக்குக் கூட்டாளியுறவின் அம்சங்களை விரிவாக்கி, உலகின் அமைதியான வளர்ச்சிக்கு மேலும் முக்கிய பங்காற்றி, மனித குலத்தின் பொது சமூகத்தை கூட்டாக உருவாக்க இரு தரப்பும் முயற்சிக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.