இந்தியப் பெருங்கடலில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று காலை 10.49 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 10 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆச்சே மாகாணம் சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
சுனாமி ஆபத்து இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் கூறியுள்ளது. இருந்த போதிலும், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.