மதுரையில் புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ.46.09 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
மதுரையில் நான்கு வழிச்சாலையான திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் துவரிமான் – மேலக்கால் சந்திப்பு அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக உள்ளது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியான சு.வெங்கடேசன் நிதின் கட்கரியை சந்தித்து அங்கு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்திய நிலையில், கடந்த ஆண்டு இதற்கான திட்டப் பணிகளை தயாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டிருந்தார்.
