இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஒப்பந்தம் “மிகக் குறைவான வரிகளை” உள்ளடக்கும் என்றும், இரு நாடுகளும் சிறப்பாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் என்றும் கூறினார்.
“நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன்,” என்று டிரம்ப் கூறினார்.
இது “வேறு வகையான ஒப்பந்தமாக” இருக்கும் என்றும் கூறினார்.
அமெரிக்கா-இந்தியா இடையே விரைவில் ‘மிகக் குறைந்த வரிகள்’ ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப்
