பிரதமர் மோடி இன்று அஸ்ட்ராவிற்கு சென்றுள்ளார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். கடைசியாக 1983இல் இந்திரா காந்தி அங்கு சென்றிருந்தார்.
எனவே இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஆஸ்திரிய சென்ற பிரதமர் மோடிக்கு ‘வந்தே மாதரம்’ பாடலை பாடி வரவேற்பு அழிக்கப்பட்டது.
வியன்னாவில், மேற்கத்திய இசையில் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய ஆஸ்திரிய கலைஞர்கள் மோடியை வரவேற்றனர்.
ஆஸ்திரியாவிற்கான இந்தியாவின் கலாச்சார தூதர் விஜய் உபாத்யாயாவின் மேற்பரப்பாவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
“ஆஸ்திரியா அதன் துடிப்பான இசை கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. வந்தே மாதரத்தின் இந்த அற்புதமான இசையமைப்பினால் நான் பூரித்துவிட்டேன்.” என்று மோடி இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.