சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் ஏப்ரல் 20ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் திங்கள் இறுதி வரை, நாடளவில் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல், 343 கோடி கிலோவாட் எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 14.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சூரிய வெப்ப ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தி அளவு 95 கோடி கிலோவாட்டை எட்டி, கடந்த ஆண்டு இருந்ததை விட 43.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு, 54 கோடி கிலோவாட்டை எட்டி, கடந்த ஆண்டு இருந்ததை விட 17.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்: VCG
