உக்ரைன் பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த வரைவு தீர்மானம் குறித்து ஐ.நா பாதுகாப்பவை பிப்ரவரி 24ஆம் நாள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
அதில், சீனா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 10 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. 5 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. இறுதியில் இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இத்தீர்மானம் முன்னதாகவே அமெரிக்கா ஐ.நா பேரவையில் முன்வைத்த வரைவு தீர்மானத்துடன் ஒத்துப்போகிறது.
அதாவது, மோதலை உடனடியாக முடித்துக் கொண்டு உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கும் இடையே நிலையான அமைதியை நனவாக்கத் தொடர்ந்து பாடுபடுமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்தது.