தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் வீட்டு இல்லாதவர்களுக்கு கான்கீரட் வீடு கட்டி தரப்படும், அதேபோல நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
உதகையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நீலகிரி மாவட்ட சமுதாய தலைவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், கட்டுமான பொறியாளர்கள் உள்ளிட்ட 21 சங்க பிரதிநிதிகள் உடன் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக ஆட்சியில் பசுந்தேயிலைக்கு மானியமாக ரூ.2 வழங்கியது. தற்போது இந்த மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பசுந்தேயிலைக்கு மானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப் படும். அதேபோல் கூட்டு பட்டாக்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதனை சரி செய்து தனிப்பட்ட வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈழுவா தீயா ஜாதி சான்றிதழ் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. தற்போது ஜாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி பெறுப்பேற்ற பின் ஓபிசி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும்.
உதகை சுற்றுலா தளத்தை மேலும் மேம்படுத்தவும், இ பாஸ் நடைமுறை தடுக்க சட்ட படி மேல்லுறையீடு செய்யப்படும். நகராட்சி கடைகள் இடிக்கப்பட்டு தற்பொழுது தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு தண்ணீர் தேங்குவதால் வியாபாரிகள் பாதிப்படைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று பிறகு வியாபாரிகளுக்கு ஏற்ற நல்ல இடத்தில் கடைகள் அமைத்து தரப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்த உடன் வீட்டு இல்லாதவர்களுக்கு கான்கீரட் வீடு கட்டி தரப்படும். அதேபோல நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் வீடுகள் கட்ட உரிய அனுமதி கிடைப்பதில்லை, 10 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளது. வீடு கட்ட அனுமதி கிடைக்காததால் பல பேர் பாதிப்படைந்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதனை பரிசீலித்து தகுதி வாய்ந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.மேலும் 2.25 சென்ட் நில வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு 210 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதனை உயர்த்த கோரிக்கை வைத்துள்ளீர்கள் இதனை 15 லட்சமாக உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூரில் பத்தாயிரம் குடும்பத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என கூறியுள்ளீர்கள், அதிமுக., அரசு அமைந்துவுடன் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். செக்சன் 17 நிலம் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. இப்பிரச்சனை மக்களுக்கு சாதகமாக அமைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஸ்டாலின் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது” என்றார்.