பட்டுப் பாதை திட்டப்பணியின் 35ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், யுனெஸ்கோவுக்கான சீனா, அஜர்பைஜான், கஜகஸ்தான், மங்கோலியா, ஓமன் ஆகிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதிகள், யுனெஸ்கோவுடன் இணைந்து, 6ஆம் நாள் பாரிஸில், நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பட்டுப் பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் உயர் நிலை பிரதிநிதிகள், யுனெஸ்கோவுக்கான பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், அறிஞர்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 1000 பேர், கருத்தரங்கு, கலந்தாய்வு கூட்டம், இசை விழா, கலை கண்காட்சி ஆகியவற்றில் கலந்துகொண்டனர்.
யுனெஸ்கோவுக்கான சீன தேசிய கமிட்டியின் தலைவர் சென் ஜியே 6ஆம் நாள் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில்,
உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு ஆகியவற்றை அடுத்து, உலக நாகரிக முன்மொழிவையும் சீனா முன்மொழிந்தது. உலகம் பதற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்கு சீனா திட்டத்தை வழங்கியுள்ளது என்றார்.