அனைத்து சீனத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் அக்டோபர் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கட்சி மத்தியக் கமிட்டியின் சார்பில், இக்கூட்டமைப்புக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள், தொழிலாளர்கள், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோருக்கு வணக்கத்தையும் தெரிவித்தார்.
மேலும், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் புதிய வளர்ச்சிக் கருத்துகளைச் செயல்படுத்தி, தொழில் முனைவோர் எழுச்சியை வெளிக்கொணர்ந்து, நவீன சோஷலிச நாட்டின் பன்முகக் கட்டுமானத்துக்கும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியின் பன்முக முன்னேற்றத்துக்கும் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.