சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில், வியட்நாமில் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
நெடுநோக்கு தன்மை வாய்ந்த சீன-வியட்நாம் பொதுச் சமூகத்தை உருவாக்கி, இரு கட்சிகள் மற்றும் இரு நாடுகளின் உறவு வளர்ச்சிக்கான புதிய காலக்கட்டத்தைத் தொடங்கி வைப்பது என்பது இப்பயணத்தின் மிக முக்கிய அரசியல் சாதனையாகும்.
2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வியட்நாமில் மேற்கொண்ட 3 ஆவது பயணம் இதுவாகும். சீன-வியட்நாம் உறவில் சீனா மிகுந்த கவனம் செலுத்துவதை இது எடுத்துக்காட்டியுள்ளது.
நெடுநோக்கு தன்மை வாய்ந்த சீன-வியட்நாம் பொதுச் சமூகம், 15 ஆண்டுகாலத்தில், சீன-வியட்நாம் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு மேம்பட்டு வருவதன் சாதனையாகும். இரு தரப்புகளுக்கிடையில் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, மக்களின் விருப்பத்தை வலுப்படுத்தி, பல தரப்பு ஒருங்கிணைப்பை நெருக்கப்படுத்தி, கருத்து வேற்றுமைகளைச் சீராகக் கட்டுப்படுத்துவது என்பது, சீன-வியட்நாம் பொது சமூகத்தை கட்டியமைப்பதற்கான திசைக்கு வழிக்காட்டும். அது மட்டுமல்லாமல், இரு தரப்புறவைத் தாண்டி, பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் இது துணை புரியும்.
பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, இரு தரப்புறவின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். தொடர்புடைய தரவுகளின்படி, கடந்த 16 ஆண்டுகளாக வியட்நாமின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா விளங்குகிறது. ஆசியானில் சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் உலகளவில் 4ஆவது வர்த்தகக் கூட்டாளியாகவும் வியட்நாம் திகழ்கிறது.
இந்நிலையில், நெடுநோக்குத் தன்மை வாய்ந்த சீன-வியட்நாம் பொதுச் சமூகத்தை இரு தரப்பும் கட்டியெழுப்புவது, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கான புதிய துவக்கப் புள்ளியாக மாறும்.