சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் ஷிச்சின்பிங் பங்கெடுப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வது பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கூட்டத்தை மே 27ஆம் நாள் நடத்தியது.
இந்த அமைச்சர் நிலை கூட்டம் மே 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. ஷிச்சின்பிங் இக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார். தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது, பல்வேறு துறைகளில் சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, சீன மற்றும் அரபு நாடுகளுக்கான பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது ஆகியவை குறித்து ஆழ்ந்த விவாதமும் திட்டவட்டமான நடவடிக்கைகளின் ஆய்வும் இக்கூட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
பல சாதனைகள் வாய்ந்த ஆவணங்களின் மூலம், சீன-அரபு ஒத்த கருத்துக்களை மேலும் ஒருங்கிணைந்து, அடுத்த கட்டத்தில் ஒத்துழைப்பைத் திட்டமிடுதல், பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து சீனா-அரபு நாடுகள் குரலைக் கூட்டாக வெளியிடுவது இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.