சர்வதேச சட்டத்தின் ஆதிகாரத்திற்கு சவால் விடுத்த லாய் ச்சிங்தே தோல்வி அடைவது உறுதி

 

சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் லாய் ச்சிங்தே அண்மையில் நிகழ்த்திய உரையில், தைவானின் வரலாற்றை வேண்டுமென்றே திரித்துப்புரட்டி, பண்டைக்காலம் தொட்டு தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும் என்ற உண்மையை மறுத்ததோடு, இரண்டாவது உலகப் போருக்குப் பின், தைவானின் உரிமை பிரச்சினையுடன் தொடர்புடைய முக்கிய சர்வதேச சட்ட ஆவணங்கள் குறித்தான விஷயத்தைத் தவிர்த்து, ஐ.நா பொது பேரவையின் 2758வது தீர்மானம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அதிகாரத்திற்கு சவால் விடுத்தார்.

சீனாவின் பெருநிலப்பகுதியும், தைவான் பிரதேசமும் பொதுவான பண்பாடு மற்றும் வரலாற்று வாய்ந்தவை. லாய் ச்சிங்தேயின் இந்த உரையில், சீன மக்கள் மிக முன்னதாக தைவான் பிரதேசத்தை வளர்ப்பது, சீன மத்திய அரசு பண்டைக்காலம் தொட்டு தைவானை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட உண்மைகள் தவிர்க்கப்பட்டன.

1943ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கெய்ரோ அறிக்கையிலும், 1945ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போட்ஸ்டாம் அறிவிப்பிலும், ஜப்பான் மறைமுகமாக கைபற்றிய தைவான் உள்ளிட்ட சீனாவின் உரிமை பிரதேசங்களை சீனாவுக்குத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் போட்ஸ்டாம் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு, நிபந்தனையின்றி சரணடைந்தாக அறிவித்துள்ளது. சர்வதேச சட்ட ஆற்றல் கொண்ட இத்தகைய ஆவணங்கள், இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கின் முக்கிய பகுதியாகும். தைவான் சீனாவைச் சேர்ந்ததானது, சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாகும் என்றும் இது வெளிப்படுத்தியுள்ளது.

“தைவான் உரிமையின் மீதான் சீனாவின் கருத்து சர்வதேச சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது”என்ற லாய் ச்சிங்தேயின் கூற்று, தன்னைத்தானே ஏமாற்றும் கருத்தாகும். இதுவரை, ஒரே சீனா என்ற கோட்பாட்டின் அடிப்படையில், 183 நாடுகள் சீனாவுடன் தூதாண்மை உறவை உருவாக்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, 10 நாடுகள் தைவானுடன் அதிகாரப்பூர்வ உறவைத் துண்டித்துள்ளன. ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகவும், சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடாகவும் திகழ்கிறது என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author