சமீபத்தில் வெளியிடப்பட்ட நவீன ராணுவ விமானங்களுக்கான உலக அடைவு (WDMMA) தரவரிசையின்படி, இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வான்சக்தியாக உயர்ந்து, சீனாவை விஞ்சியுள்ளது.
இந்த புதிய மதிப்பீடு, ஆசியாவின் மூலோபாய ராணுவ சமநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர்த்துவதுடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவை நிறுத்துகிறது.
மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் இந்திய விமானப்படை ((1,716 விமானங்கள்) , சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படையை (3,733 விமானங்கள்) விட விமானங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், WDMMA தரவரிசை ட்ரூவால் மதிப்பீட்டை (TVR) பயன்படுத்துகிறது.
இந்த அளவுகோல், விமானங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, செயல்பாட்டு பயிற்சி, தளவாட ஆதரவு, நவீனமயமாக்கல் மற்றும் தாக்குதல்/பாதுகாப்பு திறன்கள் போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் சீனாவை விஞ்சியது இந்தியா
