தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே பண்டிகை களைகட்ட துவங்கி விட்டது.
அதிகாலையிலேயே புத்தாடை உடுத்தி பலரும் பட்டாசு வெடிக்க துவங்கி விட்டனர்.
சென்னையின் பிரதான சாலைகள் காலை முதலே புகை மூட்டமாக தென்படும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
ரயில்களில் மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 5.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும் ஆம்னி பேருந்துகளில் கடந்த 3 நாட்களில் 1.77 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம் செய்துள்ளனர்
தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க தொடங்கிய மக்கள்
