தமிழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய நாட்களின்போது அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 6 இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழா இன்று கொண்டாடப்படுவதால் அனைத்து பள்ளி கல்லூரி மற்றும் முக்கிய துறைகள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 31 வேலை நாள் ஆகும்.