ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம், முதல் நிலநடுக்கம் ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மேற்கு மியாசாகி மாகாணத்தில் சுனாமி தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்படும் சேதங்களை சமாளிப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைத்துள்ளது. மற்ற விவரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.