தமிழகத்தில் ஸ்டாலின் நடத்துவது “சாரிமா மாடல் சர்க்கார்: விஜய்

Estimated read time 0 min read

தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தூர்தர்ஷன் சாலையில் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது.

மடப்புரம் கோவிலின் காவலாளியான அஜித்குமாரை திருப்புவனம் போலீசார் திருட்டு சந்தேக வழக்கில் கைது செய்து அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் லாக்கப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேசிய நிலையில் இன்று முதல் முறையாக போராட்ட களத்தில் இறங்கியுள்ளார். அவர் கையில் சாரி வேண்டாம் நீதிதான் வேண்டுமென்ற பதாகையை வைத்துள்ள நிலையில் கருப்பு சட்டை போட்டு போராட்ட களத்திற்கு வந்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது போராட்ட இடத்தில் பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அஜித்குமார் குடும்பத்தினரிடம் சாரி கேட்டதில் தவறில்லை. ஆனால் உங்கள் ஆட்சியில் மட்டும் 24 பேர் லாக்கப் மரணங்களால் உயிரிழந்துள்ளனர். அத்தனை குடும்பங்களிடமும் நீங்கள் சாரி கேட்டு உள்ளீர்களா.?

அவர்கள் அனைவரிடமும் நீங்கள் சாரி கேட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய போது எதிர்க்கட்சியாக இருந்த நீங்கள் எதிர்த்தீர்கள். ஆனால் தற்போது அஜித்குமார் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளீர்கள்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தலைமையின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அண்ணா பல்கலைக்கழகம் முதல் அஜித்குமார் கொலை வழக்கு வரை அனைத்து சம்பவங்களிலும் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்கிறது. மேலும் அனைத்துமே நீதிமன்றம் தான் கேட்க வேண்டும் என்றால் உங்கள் அரசு எதற்கு நீங்கள் ஏன் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றார். மேலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறவில்லை எனவும் சாரிமா மாடல் ஆட்சி தான் நடைபெறுகிறது என்றும் கூறினார். அதாவது ஸ்டாலின் நடத்துவது சாரிமா மாடல் சர்க்கார் என்று சாடினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author