உலகளாவிய மனிதக் குடியிருப்பு மன்றத்தின் 20 ஆவது கூட்ட அமர்வும், மதிப்பு மிக்க புதிய நிலையான நகரங்கள் மற்றும் மனிதக் குடியிருப்புக்கான விருதுகள் வழங்கும் விழாவும் நவம்பர் திங்கள் 4, 5 ஆகிய நாட்களில் ஜெனீவாவில் உள்ள உலக வானிலை அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றன. நெகிழ்ச்சியும் நிலைத்தன்மையும் கொண்ட எதிர்கால நகரத்துக்கான உள்ளூர் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பது நடப்பு கூட்டத்தின் கருப்பொருளாகும்.
நிலையான நகர்ப்புற எதிர்காலத்திற்கான உலகளாவிய அங்கீகாரமாக நிலைநிறுத்தப்பட்ட புதிய நிலையான நகரங்கள் மற்றும் மனித குடியிருப்பு விருதுகளானவை, நிலையான நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புகளை உருவாக்குதல், காலநிலை முன்னெடுப்பு நடவடிக்கைகள் சார்ந்த புதுமையான உத்திகள், தொழில்நுட்ப அணுகுமுறைகள், அவை சார்ந்த வெற்றிகரமான அனுபவத்தை ஊக்குவித்தல் போன்ற பணிகள் சார்ந்த கண்டுபிடிப்பு மற்றும் தலைமைத்துவத்தை அங்கீகரித்து கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இத்தகைய விருது பெற்ற 19 திட்டங்களில், 9 திட்டங்கள் சீனாவைச் சேர்ந்தவை.
விருது பெற்ற திட்டங்களுள் பெய்ஜிங்கின் சாங்யாங் மாவட்டம், சீன – சிங்கப்பூர் தியன்ஜின் சுற்றுச் சூழல் நகரம், ஷாங்காய் உலகக் கண்காட்சிப் பூங்காவின் கரி குறைந்த மேம்பாடு மற்றும் நகர்ப்புற மீளுருவாக்கம் சார்ந்த புதிய நடைமுறைகள் உள்ளிட்டவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
