தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன் முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தில் மிகவும் ஆக்ரோஷமான ஹீரோவாக நடித்து அசத்தினார்.
இந்நிலையில் நடிகர் சூரி தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கொட்டு காளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோவை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.