இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் முந்தைய காலாண்டில் 6.7 சதவீதத்தில் இருந்து நிதியாண்டு 2024-25இன் முதல் காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, முந்தைய ஆண்டு வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்தபோது வேலையின்மை விகிதம் மாறாமல் இருந்தது.
இதற்கிடையே, ஆடவர் வேலையின்மை முந்தைய காலாண்டில் 6.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024-25இன் முதல் காலாண்டில் 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
எனினும், மகளிர் வேலையின்மை இந்த காலகட்டத்தில் முந்தைய மூன்று காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.