மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது 9வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
விலைவாசி உயர்வு மற்றும் அதிகரித்து வரும் வீட்டுச் செலவுகளுக்கு மத்தியில், இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கும், குறிப்பாக இல்லத்தரசிகளுக்கும் ஒரு கை கொடுக்கும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இல்லத்தரசிகளின் முதன்மையான கோரிக்கை சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதாகும். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் அன்றாடத் தேவைக்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையைச் சீராக வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் சுமையாக இருக்கும் மத்திய ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் பொருட்களின் விலையைக் குறைக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
மத்திய பட்ஜெட் 2026: இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்புகள்; நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி கிடைக்குமா?
