இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி தினத்தை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23, 2024) அன்று கொண்டாடுகிறது.
இந்தியா தேசிய விண்வெளி தினத்தை “நிலவை தொடும் போது உயிர்களை தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சாகா” என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேசிய விண்வெளி தினம் – 2024இன் கொண்டாட்டங்கள் இஸ்ரோ இணையதளம் மற்றும் இஸ்ரோ யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.
இந்த நிகழ்வில் “ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்” என்று பெயரிடப்பட்ட மொபைல் கண்காட்சிகள் இடம்பெறும். அவை நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும்.
இஸ்ரோவின் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் முன்னோடி விண்வெளிப் பணிகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.