தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.
ஏற்கனவே திமுகவில் கனிமொழி தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக ஒருபடி மேலே சென்று தனது முதற்கட்ட தேர்தல் அறிக்கையையே வெளியிட்டுவிட்டது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியும் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அறிவித்துள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உள்ளிட்ட மொத்தம் 12 முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் 2026
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான திருமதி.@DrTamilisai4BJP அவர்கள் தலைமையில்… pic.twitter.com/IZrHQuoAZA
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 18, 2026
“>
தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் வியூகங்களை வகுப்பதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
