சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!

Estimated read time 1 min read

டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த சூழலில், அவருடைய ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து, அவருக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டுள்ளதாகவும்,  அவருடைய  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அவரது உடல்நிலையை பலதரப்பட்ட மருத்துவர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Communist Party of India [File Image]

Please follow and like us:

You May Also Like

More From Author