ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, ஹரியானாவில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைத் தாண்டி பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் முன்னணியில் உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.