சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 16ஆம் நாள் 2589.02 அமெரிக்க டாலராக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதேவேளையில் வரும் டிசம்பர் மாதம் நிறைவேற்றப்படும் முன்பேர வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 2613.7 டாலராக உயர்ந்துள்ளது.
ஒருபுறம், சந்தையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி இந்த வாரத்தில் வட்டியை குறைப்பது மீதான எதிர்பார்ப்பு, மறுப்புறம், அமெரிக்க குடியரசுக் கட்சியின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் டிரம்ப் மீது கொலை முயற்சி 15ஆம் நாள் மீண்டும் நடந்தது ஆகிய இரண்டு செய்திகள் விலை உயர்வை தூண்டி உள்ளன என்று ஆய்வாளர்கள் கருதினர்.
18ஆம் நாள், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை குறைப்பதாக அறிவிக்க உள்ளது என்று சந்தையில் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 25 அடிப்படை புள்ளிகள் அல்லது 50 அடிப்படை புள்ளிகள் என சந்தையில் கருத்து வேறுபாடு நிலவுகின்றன.