சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லீயுவன் அம்மையார் 13ஆம் நாள் பிற்பகல், சீனாவில் பயணம் மேற்கொண்ட பிரேசில் அரசுத் தலைவரின் மனைவி ரோசன்ஜெரா அம்மையாருடன் சேர்ந்து, சீன தேசிய நிகழ்த்துக் கலை மையத்தைப் பார்வையிட்டார்.
இம்மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலை படைப்புகளை அவர்கள் கண்டு ரசித்தனர். சர்வதேச பண்பாட்டுப் பரிமாற்றம், கலை பரவல் தொடர்புடைய பணிகளையும் அவர்கள் அறிந்துகொண்டனர்.
சீனாவும் பிரேசிலும் பண்பாடு வல்லரசுகளாகும். கடந்த சில ஆண்டுகளில், இரு தரப்புகளின் மானுடப் பண்பாட்டு பரிமாற்றம் தீவிரமாகியுள்ளது. இரு நாடுகளின் மக்களுக்கிடையில் புரிந்துணர்வு மற்றும் நட்புறவு ஆழமாகியுள்ளது.
இத்தகைய சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி, மக்களுக்கிடையில் அன்பை வலுப்படுத்த இரு தரப்பும் முயற்சி செய்ய வேண்டும் என்று பங் லீயுவன் அம்மையார் தெரிவித்தார்.