சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின் வெளி விவகார ஆணையத்தின் பணியகத் தலைவருமான வாங் யீ நவம்பர் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் ஜப்பான் அமைச்சரவையின் சிறப்பு ஆலோசகரும், தேசிய பாதுகாப்பு செயலகத்தின் தலைமைச் செயலாளருமான டாகியோ அகிபாவுடன் சீன-ஜப்பானிய உயர் நிலை அரசியல் பேச்சுவார்த்தை அமைப்பு முறையின் கலந்தாய்வை நடத்தினார்.
வாங் யீ கூறுகையில், சீன-ஜப்பானிய உறவு, மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய காலக் கட்டத்தில் இருக்கிறது. இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய ஒத்த கருத்துக்கிணங்க, இரு நாட்டுறவை மேம்படுத்தி வளர்ப்பதற்கான சரியான திசையில் இரு தரப்புகள் ஊன்றி நின்று, புதிய காலத்திற்கு ஏற்ற ஆக்கப்பூர்வமான மற்றும் நிதானமான சீன-ஜப்பானிய உறவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
உயர் நிலைப் பரிமாற்றத்தையும் பல்வேறு துறைகளிலான பேச்சுவார்த்தை மற்றும் தொடர்பையும் நிலைநிறுத்தி, மேலதிக ஆக்கப்பூர்வ அறிகுறிகளை வெளியுலகத்திற்கு தெரிவிக்கும் என்று இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
தவிர, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.