பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த பிரபல நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர், அவர் போட்டியிட்ட தர்பங்கா மாவட்டத்தின் அலி நகர் தொகுதியில் இன்று (நவ. 14) நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே அமோக முன்னிலை வகித்து வருகிறார்.
தொகுதியில் மைதிலி தாக்கூரின் பாடும் திறமைக்கும், இளைஞர்கள் மத்தியிலும் பெண்களிடமும் அவருக்குள்ள பெரும் ஆதரவுக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இந்த முன்னிலை பார்க்கப்படுகிறது. அலி நகர் தொகுதி மக்களின் பெரும் வரவேற்பைப் பயன்படுத்தி, மைதிலி தாக்கூருக்கு சீட் வழங்கிய பாஜகவின் வியூகம் வெற்றியடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
