மதுரையில மோடி போட்ட ‘அந்த’ ஒரு ஸ்கெட்ச்…. 4:00 மணிக்கு முருகன் தரிசனம் 4:30-க்கு மக்கள் சந்திப்பு…. வெளியான அதிரடி தகவல்….!! 

Estimated read time 1 min read

மதுரை மண்டேலா நகர் திடலில் நடைபெறும் பிரம்மாண்டமான NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வருகை தந்துள்ளார். இந்த வருகையின் ஒரு முக்கிய நிகழ்வாக, இன்று மாலை 4.00 மணி அளவில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பிரதமர், அங்கு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துகிறார். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பிரதமரின் இந்த ஆன்மீக தரிசனம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு, சரியாக மாலை 4.30 மணி அளவில் மண்டேலா நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மேடையில் அவர் பேசப்போகும் அதிரடியான கருத்துக்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளைக் கேட்க ஒட்டுமொத்த தமிழகமே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author