உலக பொருட்காட்சி, 2025ம் ஆண்டின் ஏப்ரல் 13ம் நாள் ஜப்பானின் ஒசாகா நகரில் துவங்கவுள்ளது. ஏப்ரல் 7ம் நாள் இப்பொருட்காட்சியின் சீன அரங்கு ஊடகங்களுக்குத் திறக்கப்பட்டது.
சீன அரங்கின் பரப்பளவு சுமார் 3.5 ஆயிரம் சதுரமீட்டர். அரங்கின் நுழைவாயிலில் 24 பாரம்பரிய சூரிய பருவ நாட்களைத் தலைப்பாகக் கொண்ட ஊடக காணொளி ஒளிப்பரப்பட்டது. மனிதர்-இயற்கை உயிர் பொது சமூகத்தை உருவாக்குவது, முழு அரங்கின் தலைப்பாகும். கலை, அறிவியல், பாரம்பரிய அறிவுத்திறமை ஆகியவையால் ஒன்றிணைக்கப்பட்ட சீன அரங்கு, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பண்பாட்டு உரையாடலை வெளிக்காட்டியது.