தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசாங்கம் இலவச வேட்டி சேலை வழங்குகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக அரசாங்கம் வழங்க உள்ளது. ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கான வேஷ்டி சேலைகளை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அடுத்த வருடம் எப்போது வேஷ்டி சேலை வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது கைத்தறித்துறை அமைச்சர் ஆர் காந்தி அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தேர்தல் பணிகள் காரணமாக வேஷ்டி சேலைகள் தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் ஆனால் தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 15-க்கு முன்பாகவே வேஷ்டி சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.