தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 31ஆம் தேதி வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாம் குடியாத்தம் தரணம் பேட்டை திருவள்ளுவர் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலும், திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப மையத்திலும் நடைபெற இருக்கிறது.
இந்த முகாம்கள் திருச்சி மற்றும் வேலூரில் நடைபெறும் நிலையில் 8-ம் வகுப்பு முதல் ஐஐடி, டிப்ளமோ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் சுமார் 30,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.