Post Views: 143
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடக்கு கர்நாடகா, கோவா கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கோவை – வால்பாறை, நீலகிரி – கூடலூர், கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் 20 செ.மீ. வரைக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Please follow and like us: