இரண்டு நாட்களுக்கு முன் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் கேபினட் அமைச்சராக பதவியேற்ற பாஜக தலைவர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இன்று ஒரு
இந்நிலையில், இன்று ஒரு நேர்காணலில் பேசிய அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெறுவது, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளை முன்னெடுத்து செல்வது குறித்து விளக்கியுள்ளார்.
“இது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மோடி 3.0 இன் வெளியுறவுக் கொள்கை மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்…
எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து வருகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.