திருப்பதி திருமலையில் ஜீசஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட பொருட்களை விற்ற கடைக்கு சீல் வைத்து, தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருமலையில் வேற்று மதங்கள் தொடர்பான வழிபாடுகள், பிரச்சாரம், ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவைக்கு தடை உள்ளது.
இந்நிலையில் சி.ஆர்.ஓ. பகுதியில் இருக்கும் கடை ஒன்றில் வேற்று மதங்கள் தொடர்பான சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. கடையில் ஆய்வு செய்தபோது ஜீசஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.