சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதை நிலையாக முன்னேற்றும் சீனாவின் முக்கிய நடவடிக்கைகளும், உயர் நிலையான வெளிநாட்டுத் திறப்பைத் தொடர்ந்து விரிவாக்கி வரும் தொடர் நடவடிக்கைகளும், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் துறையினர்களுக்கு சீனாவில் முதலீடு செய்வதற்கான மேலதிக நம்பிக்கையை அளித்துள்ளன.
சீனா நுகர்வைப் பெரிதும் முன்னேற்றி முதலீட்டு நலனை உயர்த்துவது, உள்நாட்டுத் தேவையைப் பன்முகங்களிலும் விரிவாக்குவது முதலிய ஆக்கப்பூர்வமான சமிக்கையால், சீனாவின் கான்செப்ட் பங்குகள் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சீனாவிலுள்ள முதலீட்டை அதிகரிக்க அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
உள்நாட்டுத் தேவையைத் தொடர்ந்து விரிவாக்கி சந்தை உயிராற்றல் மற்றும் நுகர்வு உள்ளார்ந்த ஆற்றலை சீனா மேலும் வெளிக்கொணர்ந்து வருவது சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலதிக வளர்ச்சி வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளதாக சில வெளிநாட்டு வணிகத் துறையினர்கள் தெரிவித்தனர்.