தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இந்த விழாவினை விகடன் நடத்துகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த நிலையில் முதலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்த ஒரு அம்பேத்கர் சிலையுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இந்தியாவில் உள்ள சுமார் 40 முற்போக்கு சிந்தனையாளர்கள் எழுதிய கட்டுரையை தொகுத்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புத்தகத்தை நடிகர் விஜய் வெளியிட நிலையில் அதனை ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆகியோர் பெற்று கொள்கிறார்கள். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.