திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது.
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள இந்து ஆன்மீக சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஆன்மீக பக்தர்கள் பலர் வழி நெடுகிலும் நின்று திருக்குடையை வழங்கினர். விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழவும் திருக்குடை அளித்து வருவதாக அறக்கட்டளை நிறுவனர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.