சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வகம் தொகுத்துள்ள ஷிச்சின்பிங்கின் உயிரினச் சுற்றுச் சூழல் நாகரிகச் சிந்தனைக்கான முதலாவது படிப்பு நூல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஆவண வெளியீட்டகத்தால் சீனத் தேசியளவில் வெளியிடப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டின் டிசம்பர் முதல் 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் வரையான காலக்கட்டத்தில், உயிரினச் சுற்றுச் சூழல் நாகரீகம் குறித்த மிகவும் முக்கியமான, அடிப்படையான படிப்பு இதுவாகும். அறிக்கை, உரை, முக்கிய கட்டளை முதலிய 79 கட்டுரைகள் இதில் இடம்பெறுகின்றன. இதில் சில கட்டுரைகள் முதன்முறையாக வெளியிடப்பட்டன குறிப்பிடத்தக்கது.