தென் அமெரிக்க நாடான பிரேசிலில், புயல் மற்றும் மழையின் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியை புயல் கடுமையாக தாக்கியது. குறிப்பாக, ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.
அப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும், சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு புயல் மற்றும் மழையின் காரணமாக, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்துள்ளது.