சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் டிசம்பர் 26ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீனப் பொருளாதாரத்தின் 5ஆவது கணக்கெடுப்பு பற்றிய தகவல் வெளியிடப்பட்டது.
நடப்புக் கணக்கெடுப்பிற்கான வரையறை நேரம் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாளாகும். தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் ஈடுபட்ட சட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரமாகும்.
இது, 2018ஆம் ஆண்டின் இறுதியில் இருந்ததை விட 52.7 விழுக்காடு அதிகமாகும். இத்துறைகளின் பணியாளர்களின் எண்ணிக்கை 42 கோடியே 89 லட்சத்து 84 ஆயிரமாகும். இது, 11.9 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், இத்தொழில்களில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை 8 கோடியே 79 லட்சத்து 95 ஆயிரமாகும். பணியாளர்களின் எண்ணிக்கை 17 கோடியே 95 லட்சத்து 64 ஆயிரமாகும்.