பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி பொதுக்குழுவில் பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனம் என ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களுக்குள் முகுந்தனுக்கு பதவி எதற்கு என அன்புமணி ராமதாஸ் கேட்டதற்கு ராமதாஸ் ஆவேசம் அடைந்தார்.
நான் உருவாக்கிய கட்சி இங்கு நான் தான் முடிவெடுப்பேன் என்று அன்புமணியை பார்த்து ராமதாஸ் ஆவேசமடைந்தார். கட்சியை உருவாக்கியவன் நான். வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். முடிவை நான் தான் எடுப்பேன்.
கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே பொறுப்புகள் வழங்கப்படுவதாக அன்புமணி எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தார். நான் எடுத்த முடிவுதான் கட்சியின் முடிவு. விருப்பம் இல்லாதவர்கள் யாராகினும் கட்சியிலிருந்து வெளியேறலாம் என ராமதாஸ் அன்புமணிக்கு மேடையிலேயே அறிவுறுத்தினார்.
பனையூரில் புதிதாக கட்டியுள்ள எனது அலுவலகத்தில் இனி தொண்டர்கள் என்னை சந்திக்கலாம் என அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே பேசினார். இந்த விவகாரம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.