1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் 39வது அதிபராக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர், தனது 100வது வயதில் ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று திங்களன்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரின் மனிதாபிமானப் பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டர், 1976 அமெரிக்கத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான குடியரசுக் கட்சியின் ஜெரால்ட் ஃபோர்டை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்குள் அதிபராக பதவியேற்றார்.
முன்னதாக கலிபோர்னியா ஆளுநராக பணியாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான ரொனால்ட் ரீகனால் 1980 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.