தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போன்று புதுச்சேரியில் மழை பெய்கிறது.
அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.