சீன மனிதரை ஏற்றிச்சென்று சந்திரனில் தரையிறங்குவது தொடர்பாக சீன மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்ட அலுவலகம் வெளியிட்ட முதற்கட்ட திட்டத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் மனிதரை ஏற்றிச்சென்று சந்திரனில் தரையிறங்கி ஆய்வுப் பணி மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திட்டப்படி, சந்திரன் லேண்டரும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலமும் இரண்டு ஏவூர்திகள் மூலம் தனித்தனியாக விண்ணில் ஏவப்பட்டு திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நுழைவதைத் தொடர்ந்து ஒன்றாக இணையும். அதற்குப் பின், விண்வெளிவீரர்கள் விண்கலத்திலிருந்து லேண்டருக்குள் நுழைவர். சந்திரன் தரையிறங்கும் லேண்டரிலிருந்து விண்வெளிவீரர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.